நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம் July 13, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கொத்தமல்லி 50 கிராம் மிளகு 25 கிராம் சுக்கு சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு தண்ணீர் 400 மி.லி துளசி இலை 8 எண்ணிக்கை கற்பூர வள்ளி இலை 3 எண்ணிக்கை இஞ்சி சிறிய துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கொத்தமல்லி மற்றும் மிளகு ஆகியவற்றை தனித்தனியே எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும்.பிறகு வறுத்த பொருட்களுடன் சுக்கு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைக்கவும்.அரைத்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 400 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் கொதிக்க வைக்கவும்.மேலும் நீருடன் அரைத்த பொருட்களை ஒன்றரை தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.மேலும் நீருடன் துளசி இலை,கற்பூர வள்ளி இலை மற்றும் இஞ்சி சேர்த்துக்கொண்டு நீரை நன்கு கொதிக்க விடவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தினந்தோறும் ஒரு வேளை குடித்து வந்தால் நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்கும். தண்ணீர் சுக்கு மிளகு மஞ்சள் தூள் துளசி இலை கொத்தமல்லி கற்பூர வள்ளி இலை Related posts:முதியோர் மற்றும் நோயுற்றோர்களுக்கு பலம் தரும் வெந்தய கஞ்சி தயாரிக்கும் முறைசுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்முகம் பொலிவு பெறதலையில் புழு வெட்டு குணமாகி ஒரே வாரத்தில் முடி வளர எளிய வீட்டு வைத்தியம்