நீரிழிவு நோய் கட்டுப்பட கறிவேப்பிலைக் குழம்பு October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தோலுரித்த சின்ன வெங்காயம்10 (பொடியாக நறுக்கவும்)பூண்டு 8 பல்தாளிப்பு வடகம்ஒரு டேபிள்ஸ்பூன்வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் தலா கால் டீஸ்பூன்புளி சிறிய எலுமிச்சை அளவுவெல்லம்ஒரு சிறிய துண்டுகறிவேப்பிலை சிறிதளவுநல்லெண்ணெய், உப்புதேவையான அளவுவறுத்து அரைக்க: கறிவேப்பிலை 3 கைப்பிடி அளவுமிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசிதலா ஒரு டீஸ்பூன்மல்லி (தனியா) ஒரு டேபிள்ஸ்பூன்தேங்காய்த் துருவல் (விரும்பினால்) ஒரு டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய் 5 Find Where To Buy These Items செய்முறை புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும்.வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு வறுத்து அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும்.ஆறியதும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம், வெந்தயம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.மேலே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு, குழம்பு கெட்டியாகி வரும் போது கறிவேப்பிலை தூவி இறக்கவும். Related posts:முதுகு தண்டு வலிமை பெற உதவும் பாட்டி வைத்தியம்மஞ்சள் தேநீர்மூக்கடைப்பு நீங்க உதவும் இயற்கை மருத்துவம்கடுமையான குதிகால் வலியை போக்க எளிய வீட்டு வைத்தியம்