மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு பெற உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம் July 28, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சோற்று கற்றாழை 50 கிராம் தேன் சிறிதளவு எலுமிச்சை சாறு சிறிதளவு இஞ்சி சிறிய துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.பிறகு 7-8 முறை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.நறுக்கிய கற்றாழை உடன் நறுக்கிய இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து அதனை சாறு போல மாற்றவும்.மேலும் இந்த சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் (சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்க வேண்டாம்)சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெறலாம். இஞ்சி சோற்று கற்றாழை தேன் Related posts:பற்பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆவாரம் பூவின் தேநீர் தயாரிக்கும் முறைஉடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் அக்ரூட் பருப்புகோடைகாலத்தில் ஏற்படும் வியர்க்குரு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்கும் ஆவாரம் பூ தேநீர்