கற்றாழை லேகியம் தயாரிக்கும் முறை July 28, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சோற்று கற்றாழை 200 கிராம் நாட்டு சர்க்கரை 100 கிராம் பூண்டு 50 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.பிறகு 7-8 முறை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.மேலும் பூண்டையும் சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.பிறகு ஒரு மண் பானையில் நறுக்கிய சோற்று கற்றாழையை சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.மேலும் இதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் பூண்டு சேர்த்து நன்கு லேகிய தன்மை அடையும் வரை வேக வைக்கவும்.பிறகு வேக வைத்த பொருட்களை 5 நிமிடம் தயிர் கடையது போல நன்கு கடைய வேண்டும். இப்போது கற்றாழை லேகியம் தயார் ஆகி விடும்.இந்த லேகியத்தை கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடலில் தோன்றும் பலவித நோய்கள் நீங்கும். பூண்டு நாட்டு சர்க்கரை சோற்று கற்றாழை Related posts:கடுமையான இருமலை குறைக்கும் ஒரு எளிதான வைத்தியம்இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்தொண்டையில் ஏற்படும் சதைவளர்ச்சி குணமாக ஒரு எளிய மருத்துவம்முகத்தில் தோன்றும் பருக்கள் மறைய ஒரு எளிய வழி