குழந்தைகளுக்கு நெஞ்சு சளியை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்

குழந்தைகளுக்கு நெஞ்சு சளியை  நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

இஞ்சி சிறிய துண்டு
பூண்டு (பற்கள்) 1
வால் மிளகு 7 எண்ணம்
தூதுவளை இலை ஒரு கைப்புடி அளவு
தேன் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இஞ்சி,பூண்டு (பற்கள்) மற்றும் வால் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதன் பிறகு தூதுவளை  இலையை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு அரைத்த தூதுவளை  இலையை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு ஏற்கனவே இஞ்சி,பூண்டு (பற்கள்) மற்றும் வால் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் அரைத்த பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இவற்றுடன்  10 மி.லி தேன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.இவ்வாறு உருவான மூலிகை மருந்தை காலை மற்றும் இரவு ஆகிய இரு வேலைகளிலும் உணவிற்கு  முன் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நெஞ்சு சளி அறவே நீங்கும்.   
இஞ்சி
பூண்டு
தேன்
வால் மிளகு
தூதுவளை இலைத்தூள்